திருச்சி அருகே லாரி கவிழ்ந்து பெண் சாவு

திருச்சி, ஜூலை 3: திருச்சி சிறுகனூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். 31 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சி.ஆர். பாளையத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர், அரு
Published on
Updated on
1 min read

திருச்சி, ஜூலை 3: திருச்சி சிறுகனூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். 31 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சி.ஆர். பாளையத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர், அருகிலுள்ள தச்சக்குறிச்சியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினி லாரியில் புறப்பட்டனர்.

தச்சக்குறிச்சி காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது. இதில், லாரியில் பயணம் செய்த சி.ஆர். பாளையத்தைச் சேர்ந்த முத்துவீரன் மனைவி தாயம்மாள் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 31 பேர் காயமடைந்தனர். இவர்கள், இருங்களூர் தனியார் மருத்துவமனையிலும், திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களை மாநில கால்நடை, பால்வளத் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். மனோகரன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.