பேராவூரணி, ஜூலை 3: பேராவூரணி ஒன்றிய தேமுதிக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஏ. செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட விஜயகாந்த் மன்றத் துணைச் செயலர் எஸ். செந்தில்நாதன், தொண்டரணித் துணைச் செயலர் எம்.ஜி. திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் என்.ஏ. நடராஜன், ஒன்றியத் துணைச் செயலர்கள் வி. சிதம்பரம், சிவ. நீலகண்டன், கே. மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.