நியாயவிலைக் கடைகள் திறப்பு

கரூர், ஜூலை 3: கரூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பெற்ற நியாயவிலைக் கடைகள், குடிநீர் தொட்டிகளை மக்களவை உறுப்பினர் சனிக்கிழமை திறந்துவைத்தார்.    கரூர் மக்களவை உறுப்பினர்
Published on
Updated on
1 min read

கரூர், ஜூலை 3: கரூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பெற்ற நியாயவிலைக் கடைகள், குடிநீர் தொட்டிகளை மக்களவை உறுப்பினர் சனிக்கிழமை திறந்துவைத்தார்.

   கரூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முஷ்டகிணத்துப்பட்டி, மணவாடி, தாந்தோன்றிமலை, ஆண்டாங்கோயில் மேற்கு, ராயனூர் ஆகிய இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டப்பட்டன.

   இதற்கான திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் நியாய விலைக் கடைகளைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினர்.

   பின்னர், ராயனூர் ஆதிதிராவிடர் தெருவில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார நிலையத்தையும் தம்பிதுரை திறந்துவைத்தார்.

   அதே போல, கரூர் நகரத்தில் 5,7,18,28-வது வார்டுகளில் மின் மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளுடன் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளையும் திறந்து வைத்தார்.

   கரூர் - சேலம் 4 வழிச் சாலையிலுள்ள மண்மங்கலத்திற்கு தம்பிதுரையும், செந்தில்பாலாஜியும் சென்று பார்வையிட்டனர்.

   அடிக்கடி சாலை விபத்து நிகழும் இப்பகுதியில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் விடுத்திருந்த வேண்டுகோளின்படி அவர்கள் ஆய்வு நடத்தினர். பின்னர், இப்பகுதியில் குகைவழிப் பாதை வேண்டுமென்பதை உணர்ந்து, பாதை அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென தம்பிதுரை எம்.பி உறுதியளித்தார்.

   நிகழ்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தி. பிச்சையா, அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் எச். சாகுல்அமீது, நகர்மன்றத் தலைவர் ஜெ. ரேவதி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் வி. செந்தில்நாதன், மாவட்டத் தலைவர் எஸ். சுந்தர்ஜி, அதிமுக மாவட்டப் பொருளாளர் எஸ். முரளி, தொகுதிச் செயலர் எஸ். திருவிகா, ஒன்றியச் செயலர்கள் ஆர். விஜயபாஸ்கர், கே. கமலக்கண்ணன், நிர்வாகி எம். முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.