திருச்சி, ஜூலை 3: கட்டப்பஞ்சாயத்து மூலம் நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பான புகார்களை திருச்சி மாநகரக் காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை (ஜூலை 4) காலை நேரிடையாகத் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நில மோசடி, நில அபகரிப்பு, போலி ஆவணங்கள், கட்டப்பஞ்சாயத்து மூலம் நில மோசடி செய்பவர்கள் குறித்த புகார்களை திங்கள்கிழமை (ஜூலை 4) காலை 10.30 மணிக்கு மாநகரக் காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்து நேரடியாகப் பெற்று விசாரணை நடத்த உள்ளார்.எனவே, பொதுமக்கள் இதுகுறித்த புகார்களை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையரிடம் நேரிடையாக அளிக்கலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.