பெரம்பலூர், ஜூலை 3: பெரம்பலூரில் பணம் பறித்த இரு பெண்களை பெரம்பலூர் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவசாமி (50), அவரது மனைவி சுகந்தி (45).
இவர்கள் இருவரும் ஞாயிற்றுகிழமை மாலை பெரம்பலூர் செல்வதற்காக, அரசுப் பேருந்தில் ஏறி பெரம்பலூர் பாலக்கரை அருகே வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, சுகந்தியின் அருகே நின்றிருந்த இளம்பெண் அவரது பையில் இருந்த ரூ. 500-ஐ பறித்துக்கொண்டு பேருந்தில் இருந்து குதித்து ஓடினாராம்.
இதையறிந்த சுகந்தியின் கணவர் அந்தப் பெண்ணை பிடித்தபோது, மற்றொரு பெண் அங்கிருந்து ஓடினாராம்.
தகவலறிந்த போலீஸôர் அந்தப் பெண்களைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் மதுரை மாவட்டம், வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவிகள் ரேவதி (25), மஞ்சுளா (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள் பணத்தை மீட்டு விசாரித்து வருகிறார்.