அறந்தாங்கி, ஜூலை 3: அறந்தாங்கி நகரில் வாக்காளர்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ மு. ராஜநாயகம்.
அறநதாங்கி நகராட்சிக்குள்பட்ட 5, 22, 23, 24, 25, 26 ஆகிய வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று நன்றி தெரிவித்த அவர் பேசியது:
அறந்தாங்கி நகராட்சியில் உள்ள அடிப்படைத் தேவைகளான குடிநீர். சாலைகள், தெருவிளக்குள் போன்றவைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நிறைவேற்றப்படும்.
மேலும், வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதிக நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியில் தொகுதிச் செயலர் சி. செல்லக்கண்ணு, நகரச் செயலர் க.சிவசண்முகம், எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் எம். பாண்டித்துரை, நகர அவைத் தலைவர் க. வீரப்பன், இளைஞரணி அமைப்பாளர் ஜி. மண்டலமுத்து, முன்னாள் நகரச் செயலர் முத்துக்கருப்பையா, மாணவரணித் துணைச் செயலர் எம்.ஜி.ராஜா, நகர்மன்ற உறுப்பினர் நா. முருகேசன், ஒன்றிய ஜெ.பேரவைத் துணைச் செயலர் சாத்தகுடி ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.