அனுமதியின்றி வெடி பொருள்கள் வைத்திருந்தவர் கைது
திருத்துறைப்பூண்டி, ஜூலை 9: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனுமதியின்றி வெடி பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
முத்துப்பேட்டை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் காசிராஜன் (52). இவருக்கு சொந்தமான கிடங்கில் புதன்கிழமை அதிகாலை வெடி பொருள்கள் வெடித்து சிதறியதில், அருகில் இருந்த காய்கறி கடைக்கும் தீ பரவியது.
தகவலறிந்து முத்துப்பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, அனுமதியில்லாமல் வெடி பொருள்கள் வைத்திருந்ததாக காசிராஜனைக் கைது செய்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அபுதாபியில் வேலைவாய்ப்பு
கரூர், ஜூலை 9: அபுதாபியிலுள்ள பைப் பிட்டிங் நிறுவனத்திற்கு ஆள்கள் தேவைப்படுவதாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) சீ.ராமகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.