பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. ஜான் அசோக் முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் பி.எஸ். ஜோசப், துணை முதல்வர்கள் டி. லீமாபீட்டர், ஜி. ரவி, கல்லூரி டீன் ஏ. சேவியர் அமலதாஸ் மற்றும் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் கொண்ட குழுவினர், பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, ஆங்கிலப் புலமையை வளர்த்தல், ஒழுக்கம், எதிர்கால நோக்கம், தன்னம்பிக்கை, தலைமைபண்பை வளர்த்தல், வேலைவாய்ப்புக்கான படிப்பு மட்டுமன்றி பல்நோக்கு திறமைகளை மாணவ, மாணவிகள் எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தனர்.
இதில் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் ஸ்டீபன்குமார், முஹமது அலி, சேவியர் சூசை, ஜயந்தி, ராஜேஸ்வரி, அமானுல்லா உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை, அலுவலக மேலாளர் ஆர். ஆனந்தன் மற்றும் துறைத் தலைவர்கள் செய்திருந்தனர்.