மன்னார்குடி,ஜூலை 14: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வியாழக்கிழமை வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்த உணவுக் கடை உரிமையாளரிடமிருந்து ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
கூப்பாச்சிக்கோட்டை வைத்திலிங்கம் மகன் அருள்காப்பியன். இவர், பட்டுக்கோட்டையில் உணவுக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அருள்காப்பியன் வியாழக்கிழமை மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள வங்கியிலிருந்து ரூ. 2.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் பணத்தை வைக்க முற்பட்ட போது, அருகே நின்ற மர்ம நபர் கீழே ரூ. 50 கிடப்பதாகக் கூறினாராம்.
கீழே கிடந்த பணத்தை எடுத்து கொண்டு அருள்காப்பியன் நிமிர்ந்தபோது, இரு சக்கர வாகனத்தில் இருந்த பணப்பையும், அருகே நின்ற மர்ம நபரையும் காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில், மன்னார்குடி போலீஸôர் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.