கரூர், ஜூலை 14: கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்பில் சேர விரும்புவோர் ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் பேராசிரியர் மு. செல்லமுத்து தெரிவித்தது:
2011-12ஆம் ஆண்டிற்கான பட்ட மேற்படிப்பு (எம்.ஏ,. எம்.எஸ்.சி., எம்.காம்.) முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு இம் மாதம் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சேர விரும்பும் மாணவர்கள் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், கலந்தாய்வானது 29.7.11 அன்று காலை 9 மணிக்கு அந்தந்தத் துறைகளில் நடைபெறும். இது தொடர்பாக கடிதம் ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
கலந்தாய்வுக்கு வரும்போது உரிய மூலச் சான்றுகள், கட்டணத் தொகையுடன் பெற்றோருடன் வர வேண்டும்.