பொன்னமராவதி, ஜூலை 14: பொன்னமராவதியில் புதன்கிழமை கார் மோதி வெல்டிங் பட்டறை தொழிலாளி காயமடைந்தார்.
பொன்னமராவதி பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர், தனது நண்பருடன் ஜெஜெ நகர் அருகே சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் சரவணன் மீது மோதிவிட்டு, சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் கார் ஓட்டுநரான மற்றொரு சரவணனை பொன்னமராவதி போலீஸôர் கைது செய்தனர்.