கும்பகோணம், ஜூலை 14: மும்பையில் புதன்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, கோயில் நகரமான கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸôர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், கோயில்கள், தலைவர்கள் சிலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸôர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள், வெளியூரிலிருந்து கும்பகோணம் வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலமும் போலீஸôர் சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும், நகரம் முழுவதும் போலீஸôர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். தனியார் தங்கும் விடுதிகள், பூங்காக்கள் ஆகிய இடங்களிலும் போலீஸôர் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு, வாகன தணிக்கையிலும் போலீஸôர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.