இலுப்பூர், ஜூலை 14: இலுப்பூர் அருகேயுள்ள இடையபட்டியில் குடிசை வீடு வியாழக்கிழமை தீக்கிரையானது.
இடையபட்டியைச் சேர்ந்தவர் கோபால். இவரது குடிசை வீட்டில் வியாழக்கிழமை தீப்பற்றியது. தகவலறிந்து இலுப்பூர் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் பழனியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
சமையல் செய்த போது அடுப்பிலிருந்து தீப்பொறி குடிசையில் தெறித்ததால், இந்த தீ விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.