மயிலாடுதுறை, ஜூலை 14: நாகை மாவட்டம், குத்தாலம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட மோதல் தொடர்பாக 55 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.
குத்தாலம் வட்டம், நச்சினார்குடி திரெüபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சிவா. இவர், புதன்கிழமை நச்சினார்குடிக்கு தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது தென் நச்சினார்குடி பகுதியைச் சேர்ந்த பி. மோகன், ஏ. ராஜ்மோகன் ஆகியோர் சிவாவை வழிமறித்து, அவரிடமிருந்த ரூ. 5.500 ரொக்கம், 2 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டனராம்.
ஆத்திரமடைந்த சிவா தனது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருடன் நச்சினார்குடிக்குச் சென்று ராஜ்மோகனை ஜாதி பெயரை சொல்லி திட்டியதுடன், அவரைத் தாக்கிய அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலையூர் போலீஸôர் 55 பேர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் சிவா உள்ளிட்ட 52 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.