திருச்சி, ஜூலை 14: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் சனிக்கிழமை (ஜூலை 16) காலை 9 மணிக்கு திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட திமுக செயலருமான கே.என். நேரு வெளியிட்ட அறிக்கை: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் கூட்டம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநில வழக்குரைஞர் அணித் தலைவர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி தலைமை வகிக்கிறார். திமுகவினரை களங்கப்படுத்தும் வகையில் போடப்பட்டு வரும் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவும், தொடர்ந்து நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும், கட்சித் தலைவர் கருணாநிதியின் ஆலோசனையின்படி இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்றார் நேரு.