திருச்சி, ஜூலை 14: திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரோஷன் மஹாலில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு புறநகர் மாவட்ட அவைத் தலைவர் மணலை க. நெடுமாறன் தலைமை வகிக்கிறார். அதிமுக இலக்கிய அணிச் செயலரும், மாவட்டப் பொறுப்பாளருமான வைகைச்செல்வன் எம்எல்ஏ, புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான என்.ஆர். சிவபதி, திருச்சி எம்பி ப. குமார் ஆகியோர் பேசுகின்றனர். எம்எல்ஏக்கள் டி.பி. பூனாட்சி (மண்ணச்சநல்லூர்), ஆர். சந்திரசேகர் (மணப்பாறை), டி. இந்திராகாந்தி (துறையூர்) உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கின்றனர். எனவே, கூட்டத்தில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கட்சியின் அனைத்துக் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் என்.ஆர். சிவபதி கேட்டுக் கொண்டுள்ளார்.