அரியலூர், ஜூலை 14: அரியலூர் மாவட்டம், பெரியமணக்குடியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை போலீஸôர் வியாழக்கிழமை கைப்பற்றினர்.
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல் சரகத்துக்குள்பட்ட பெரியமணக்குடியைச் சேர்ந்த கருப்பையா மகன் மகாவிஷ்ணன் (40). இவரது மனைவி வேம்பு. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில், வேம்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் சென்றுவிட்டராம். மகாவிஷ்ணன் மட்டும் வீட்டில் இருந்தாராம்.
புதன்கிழமை இரவு வெளியே சென்ற அவர், வியாழக்கிழமை அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், இடது மார்பு, தோள் பட்டை உள்ளிட்ட
பல்வேறு இடங்களில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்ததை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கயர்லாபாத் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரூபேஷ்குமார், டி.எஸ்.பி. சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் மயில்சாமி மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இதுகுறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.