தஞ்சாவூர், ஜூலை 14: தஞ்சாவூரில் பந்தல் போடும் போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பசுபதிகோயில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜு (48). இவர் தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமை பந்தல் போட்டுக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
தீப்பற்றி சாவு: தஞ்சாவூர் அழகிக்குளம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் அனுசுயா (55). இவர் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த போது புதன்கிழமை தீக்காயமடைந்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுசுயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையப் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.