புதிய உணவகம் திறப்பு

புதுக்கோட்டை, ஜூலை 14: புதுக்கோட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்விஎஸ் குழுமம் சார்பில் புதிய உணவகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சத்தியமூர
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை, ஜூலை 14: புதுக்கோட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்விஎஸ் குழுமம் சார்பில் புதிய உணவகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

 புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சத்தியமூர்த்தி சாலையில் அமைக்கப்பட்ட எஸ்.வி.எஸ். உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் திருமயம் பி.கே. வைரமுத்து முன்னிலையில், ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன் திறந்துவைத்தார்.

 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறந்தாங்கி மு. ராஜநாயகம், விராலிமலை சி. விஜயபாஸ்கர், மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் சீனு சின்னப்பா, அதிமுக மாவட்டச் செயலர் வி.சி. ராமையா, அதிமுக இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் ஆர். ராஜசேகர், நகரச் செயலர் க. பாஸ்கர், தேமுதிக மாவட்டச் செயலர் என். ஜாகீர், நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் எஸ். ராஜேந்திரன், அதிமுக நிர்வாகிகள் கடையக்குடி திலகர், கீரனூர் துரை, தொழிலதிபர்கள் குமார்பண்ணையார், ராமதாஸ், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 விழா ஏற்பாடுகளை உணவக நிர்வாகிகள் எஸ்.வி.எஸ். வெங்கடாசலம், எஸ்.வி.எஸ். செந்தில்ஆண்டவர், எஸ்.வி.எஸ். ஜெயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.