தஞ்சாவூர், ஜூலை 14: மும்பையில் புதன்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், ரயில் நிலையம், புதிய, பழையப் பேருந்து நிலையங்கள், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை உள்ளிட்டப் பகுதிகளிலும் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் விடுதிகளில் சந்தேகப்படும் வகையில் தங்கியிருப்போரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இரவில் வாகனச் சோதனையும் நடைபெற்று வருகிறது.