திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 14: பூதலூர் ஊராட்சி ஒன்றியம், தீச்ச சமுத்திரம் ஊராட்சி முல்லைகுடியில் அமைந்துள்ள ஸ்ரீ அக்னி காளியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. (படம்)
விழாவையொட்டி, காலை 7.31 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், 8.45 மணிக்கு கடம் புறப்பாடும், 9 மணிக்கு குடமுழுக்கும் நடைபெற்றது.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கோயில் விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.