பெரம்பலூர், ஜூலை 14: பெரம்பலூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட மூதாட்டி புதன்கிழமை இரவு தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் அருகேயுள்ள, பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மனைவி செல்லம்மாள் (65). இவருக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவதிப்பட்ட அவர், பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம். இந்நிலையில், புதன்கிழமை இரவு ஏற்பட்ட வலியால் அவதிப்பட்ட செல்லம்மாள், மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமûடாந்த அவர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் திருச்சி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, பாடாலூர் காவல் நிலையச் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.