ரத்தப் பரிசோதனை முகாம்

 பெரம்பலூர், ஜூலை 14: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்தப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  கல்லூரியின் உயிர் வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகா
Published on
Updated on
1 min read

 பெரம்பலூர், ஜூலை 14: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்தப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

 கல்லூரியின் உயிர் வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்வி நிறுவனங்களின் தளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீல்ராஜ், துணைத் தலைவர் அனந்தலெட்சுமி கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கல்லூரி ஆலோசகர் இராம. மீனாட்சி முகாமைத் தொடக்கி வைத்தார். மகளிர் கல்லூரி முதல்வர் (பொ) கே. பாகீரதி, துறைத் தலைவர் முருகசுந்தரி ஆகியோர் ரத்த வகை கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். முகாமில் மாணவிகள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 முகாம் ஏற்பாடுகளை, விரிவுரையாளர்கள் பிரகதீஸ்வரி, மார்க்கரெட், ரேசாலேண்ட், பாத்திமாமேரி, கீர்த்திகா மற்றும் பிரியாஸ்டாலின் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக, விரிவுரையாளர் கோகுலலஷ்மி வரவேற்றார். விரிவுரையாளர் சுபா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com