அரியலூர், ஜூலை 23: அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான திறந்தவெளிக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடுகளைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
அரியலூர்- கல்லங்குறிச்சி சாலையில் உள்ள அரசு சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான திறந்தவெளிக் கிடங்கில் ஆலை பயன்பாட்டிற்காக அதிகளவில் இரும்புத் தகடுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் ரூ. 10,000 மதிப்புள்ள இரும்புத் தகடுகளை கடந்த சில நாள்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆலையின் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றும் சோலைமுத்து, கயர்லாபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.