கரூர், ஜூலை 23: பொதுமக்கள் தங்களின் புகார்களை மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. நாகராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து கரூர் மாவட்டக் காவல் துறை தனிப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக காவல் துறையில் பொதுமக்கள் தங்களது புகார்களை மின்அஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, உடன் பதில் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தங்களின் அனைத்து வகையான புகார்களையும் ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம். இந்த இணையத்தில் பெறப்படும் அனைத்து வகையான புகார்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக உடன் நடவடிக்கை எடுத்து, அதன் விவரம் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல், காணாமல் போன நபர்கள் குறித்த விவரம் மற்றும் காவல் துறை சம்பந்தமான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி இந்த இணையதள முகவரி இயங்கி வருகிறது.
பொதுமக்கள் காவல் துறையின் இந்த இணையதள முகவரியைப் பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை வேண்டியிருந்தால், புகார்தாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அணுகி புகார் கொடுத்து நிவாரணம் தேடிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.