திருவாரூர், ஜூலை 23: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரியும், சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழக அரசின் நிலையை கண்டித்தும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வி.பி. முத்துலட்சுமி, எஸ். பாலசுப்பிரமணியன், பி. பழனி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எம்.ஏ. மாரியப்பன், இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவர் எஸ். பாஸ்கர், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் ஜெ. அரவிந்த், எஸ்.எஸ். செல்வேந்திரன், எம். பழனிவேலு, முகம்மதுரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.