பாபநாசம், ஜூலை 23: தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் பட்டப்பகலில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
பாபநாசம் பாலாஜி நகரில் வசித்து வருபவர் குணசேகரன் (45). இவர், இப் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார், அதோடு ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தாராம் குணசேகரன்.
மாலை வீட்டிற்கு திரும்பிய அவர், வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி நகைகள், ரூ. 8 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் போலீஸôர் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.