திருச்சி, ஜூலை 23: பாலியல் குற்ற வழக்கில் நித்யானந்தாவின் ஜாமீன் மனுவை ரத்து செய்து, வழக்கை விரைந்து நடத்தி அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் கழக திருச்சி, லால்குடி மகளிரணி, இளைஞரணி சார்பில், புத்தூர் நான்கு சாலை சந்திப்பு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மாநில மகளிரணி பிரசாரச் செயலர் வீ. கலைவாணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மு. சேகர் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, லால்குடி மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட இளைஞரணிச் செயலர் மா. தமிழ்மணி வரவேற்றார். இளைஞரணித் தலைவர் கே.ஏ. நேதாஜி நன்றி கூறினார்.