நித்யானந்தாவைக் கண்டித்து தி.க. ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 23: சுவாமி நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து, அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை பழைய
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர், ஜூலை 23: சுவாமி நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து, அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை பழையப் பேருந்து நிலையம் அருகே, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி அமைப்பாளர் அ. கலைச்செல்வி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தலைமைக் கழகப் பேச்சாளர் ரா. பெரியார் செல்வன், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், செயலவைத் தலைவர் ராஜகிரி கோ. தங்கராசு, மாநில இளைஞரணிச் செயலர் ரா. ஜெயக்குமார், பட்டுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இ. அல்லிராணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் க. சிவக்குமார், செயலர் ரா. இளவரசன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ச. அஞ்சுகம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கு. ஜெயமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், அவரது வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.