நீடாமங்கலம், ஜூலை 23: வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணப் பொருள்கள் வழங்கும் விழா, இலக்கிய மன்ற தொடக்க விழா ஆகியன அண்மையில் நடைபெற்றன.
விழாவுக்கு கு. நடராஜன் தலைமை வகித்தார். ஊராட்சிமன்றத் தலைவர் லட்சுமிசிங்காரம் முன்னிலை வகித்தார்.
விழாவில் "உதவும் மனங்கள் சேவை' மையத்தின் தலைவர் எஸ்.எஸ். குமார், ராஜராஜ சோழன் சேவை மையத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். ராஜேந்திரன், அ.தி.மு.க. கிளைச் செயலாளர் துரைராஜ், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை சாந்தி நன்றி கூறினார்.