மணமேல்குடி, ஜூலை 23: மணமேல்குடி அருகேயுள்ள கோபாலபட்டினத்தில் ரஹ்மானியா மதரஸôவின் பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஜமாத் தலைவர் ஏ.எஸ்.எம். சையது முகம்மது தலைமை வகித்தார். உதவித் தலைவர் எஸ். முகம்மது இஸ்மாயில், நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்.
சேலம் அரபிக் கல்லூரி பேராசிரியர் எம். முகம்மது அப்தாஹிர் சிறப்புரையாற்றினார்.
விழாவில், மதரஸô மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியும், "மார்க்கத்தை பேணுவது ஆண்களா? பெண்களா?‘ என்னும் தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், இந்த மதரஸôவில் 3 ஆண்டு மார்க்க கல்வி பயின்றவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
முன்னதாக, பிர்தவுஸ் வரவேற்றார். ஜமாத் செயலர் ஜே. யூசுப் நன்றி கூறினார்.