நீடாமங்கலம், ஜூலை 23: நீடாமங்கலம் ஷீலா சமூக நலவாழ்வு சங்கத்தில், பனை ஓலையில் கலைப் பொருள்கள் உற்பத்தி செய்வது குறித்து 6 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பனை ஓலையில் பொருள்கள் செய்து கூடுதல் வருமானம் பெற விருப்பமுள்ள 18 வயது முதல் 35 வயது வரையிலான பெண்கள் தங்கள் பெயரை சங்க அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி அன்று பதிவு செய்து கொள்ளுமாறு சங்கச் செயலர் யோ. மோகன்ராஜ்சுந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.