மணல் ஏற்றி வந்த 6 லாரிகள் பிடிபட்டன

தஞ்சாவூர், ஜூலை 23: தஞ்சாவூரில் சனிக்கிழமை அரசு விதிமுறைகளை மீறி, மணல் ஏற்றிச் சென்ற 6 லாரிகளை தஞ்சை கோட்டாட்சியர் பிடித்து விசாரணை நடத்தினார். அரசு மணல் குவாரிகளிலிருந்து, விதிமுறைப்படி 2 யூனிட் மணல்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர், ஜூலை 23: தஞ்சாவூரில் சனிக்கிழமை அரசு விதிமுறைகளை மீறி, மணல் ஏற்றிச் சென்ற 6 லாரிகளை தஞ்சை கோட்டாட்சியர் பிடித்து விசாரணை நடத்தினார்.

அரசு மணல் குவாரிகளிலிருந்து, விதிமுறைப்படி 2 யூனிட் மணல் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் மணல் ஏற்றிச் செல்லும் வெளி மாவட்ட லாரிகள் கூடுதலாக பணம் கொடுத்து 3 யூனிட் வரை மணல் ஏற்றிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தஞ்சாவூர் மாவட்ட (உள்ளூர்) லாரிகளுக்கு 3 யூனிட் மணல் ஏற்ற அனுமதிப்பதில்லையாம். இதைக் கண்டித்து, உள்ளூர் லாரி உரிமையாளர்கள், வெளி மாவட்ட லாரிகளுக்கு 3 யூனிட் மணல் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையே, கோட்டாட்சியர் ராஜாமணி மாரியம்மன் கோயில் புறவழிச் சாலையில் அதிக மணல் ஏற்றி வந்த 6 லாரிகளை சனிக்கிழமை பிடித்தார். அந்த லாரிகள் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com