தஞ்சாவூர், ஜூலை 23: மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 84.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15,246 அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 5,652 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1,501 கன அடி, கல்லணைக் காவிரியில் வினாடிக்கு 2,017 கன அடி, கொள்ளிடத்தில் வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.