திருச்சி, ஜூலை 23: திருச்சி பொன்மலை ரயில்வே இருபாலர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இலக்கியப் பேரவை, ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பொன்மலை ரயில்வே பணிமனையின் பணியாளர் அலுவலரும், பள்ளித் தாளாளருமான டி.ஆர். ராகவேந்திரன் தலைமை வகித்தார்.
விழாவில் பொன்மலை பணிமனையின் தலைமைப் பணிமனை மேலாளர் பி. மகேஷ் சிறப்புரையாற்றினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லஷ்மி மகேஷ் பரிசுகள் வழங்கினார்.
பிஷப் ஹீபர் கல்லூரி இணைப் பேராசிரியர் சுரேஷ் பெட்ரிக் ஆங்கில இலக்கியப் பேரவையையும், இணைப் பேராசிரியர் பி. ராஜ்குமார் தமிழ் இலக்கியப் பேரவையையும் தொடக்கி வைத்தனர்.
முன்னதாக, பள்ளி முதல்வர் வி. சண்முகம் வரவேற்றார். சிந்தியா மைக்கேல் நன்றி கூறினார்.