கும்பகோணம், ஜூலை 23: கும்பகோணம் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில், 2011-12-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் புதிய தலைவராக கணேசன், செயலராக ரவிச்சந்திரன் மற்றும் புதிய இயக்குநர்கள், நிர்வாகிகள் பதவி ஏற்றுகொண்டனர். விழாவில் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் அருள்மொழிச்செல்வன், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் இயக்குநர் ராஜாகோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் மாற்றுத் திறனுடைய இரு பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களும், ஈஸ்வர் மன வளர்ச்சிக் குன்றிய பள்ளிக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
விழாவுக்கு சங்கத்தின் துணை ஆளுநர் கணேஷ் முன்னிலை வகித்தார்.விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, முன்னாள் தலைவர் கோபிராஜன் வரவேற்றார்.
செயலர் சிவகுருநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். புதிய தலைவர் கணேசன், செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.