தஞ்சாவூர், ஜூலை 30: பதவியேற்ற குறுகிய காலத்தில் அதிமுக அரசு தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதையடுத்து தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டி:
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் கைது செய்யப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் என்ன குற்றம் செய்தார் என்று வெளிப்படையாக தெரிவிக்காமல் அவரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். திமுகவின் சட்டப்பேரவைத் தலைவர் மு.க. ஸ்டாலின் என்பதை மறக்கக்கூடாது.
திமுவினர் சிறைக்கு செல்ல அஞ்சக்கூடியவர்கள் அல்ல என்றாலும், கைது செய்வதற்கான காரணத்தை அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும் என்றார் வீரமணி.