கரூர், ஜூலை 30: கரூர் வாங்கல் சாலையிலுள்ள வள்ளலார் கோட்டத்தில் அமல நித்தியானந்தர் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அமல நித்தியானந்தர் ஜீவ சமாதியடைந்ததன் 51-வது ஆண்டு தொடக்க விழா வள்ளலார் கோட்டத்தில் நடைபெற்றது.
அமல நித்தியானந்தரின் உருவப் படத்துக்கு குருதேவர் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வழிபாடு நடத்தினர். அருட்பெருஞ்ஜோதி கல்வி அறக்கட்டளைத் தலைவர் க. குமரன் பங்கேற்று, அமல நித்தியானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கினார். இதில் குமர நித்தியானந்த ஜோதி பிரசாதம் வழங்கினார்.