அரியலூர், ஜூலை 30: அரியலூரில் திங்கள்கிழமை (ஆக. 1) திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அதிமுக அரசால், திமுகவினர் மீது வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்து, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் காலை 10 மணிக்கு எனது தலைமையில் இந்த ஆர்பப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் பல்லேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுப் பேசுகின்றனர். எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.