பாபநாசம்,ஜூலை 30: தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,கீழ கபிஸ்தலம் பகுதிநேர அங்காடிக்கு மின்னணு எடைக் கருவியை பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சி. சேதுராமன் அண்மையில் வழங்கினார். நிகழ்ச்சியில் கபிஸ்தலம் கிராம நிர்வாக அதிகாரி கே. ராஜரத்தினம்,பாரதீய கிசான் சங்க மாவட்டச் செயலர் முருகன், துணைச் செயலர் எஸ். ஜம்புலிங்கம்,விவசாயப் பேரியக்க ஒன்றியச் செயலர் கே. சிங்காரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.