"கரூரில் கிடைத்த நாணயங்கள் வணிக சிறப்பை வெளிப்படுத்துகின்றன'

கரூர், ஜூலை 30: கரூரில் கிடைத்த நாணயங்கள் கரூரின் பண்டைய வணிகச் சிறப்பை வெளிப்படுத்துகின்றன என்றார் கரூர் வரலாற்றுப் பேரவைச் செயலர் ம. ராஜசேகர தங்கமணி.  அரசு அருங்காட்சியகத் துறை சார்பில், கரூரிலுள்ள
Published on
Updated on
1 min read

கரூர், ஜூலை 30: கரூரில் கிடைத்த நாணயங்கள் கரூரின் பண்டைய வணிகச் சிறப்பை வெளிப்படுத்துகின்றன என்றார் கரூர் வரலாற்றுப் பேரவைச் செயலர் ம. ராஜசேகர தங்கமணி.

 அரசு அருங்காட்சியகத் துறை சார்பில், கரூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் கரூரில் கிடைத்த நாணயங்கள் மற்றும் அரிய கலைப் பொருள்கள் என்ற தலைப்பில் மாதாந்திர சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

 இதில் ஓய்வு பெற்ற பேராசிரியரும், கரூர் வரலாற்றுப் பேரவையின் செயலருமான ம. ராஜசேகர தங்கமணி பேசியது:

 கரூர் அமராவதிப் படுகையில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து பொறிக்கப்பட்ட சங்ககாலச் சேரர், பாண்டியர் நாணயங்கள் மிக முக்கியத்துவமுடையவை.

 இந்த வரிசையில் மாக்கோதை, குட்டுவன் கோதை, கொல்ஈபுறை, பெருவழுதி காலத்து நாணயங்கள் புதிய வரலாற்றுத் தரவுகளாகும். கரூரில் கிடைத்துள்ள ரோமாபுரி, கிரேக்க, சீன நாணயங்கள் கரூரின் வாணிகச் சிறப்பை பறைசாற்றுகின்றன. இதனால், சங்க காலத்தில் தமிழகம் யவன நாட்டுடன் வணிகம் புரிந்தது புலனாகிறது. அதேபோல, அமராவதி படுகையில் கிடைத்துள்ள மெüரியர், சங்கப் பாண்டியர், சங்கச் சேரர் காலத்திய வெள்ளி முத்திரை நாணயங்களால் மிகப் பழைய காலத்திலேயே கரூர் வடநாட்டுடன் வாணிகம் செய்தமை புலனாகிறது. கரூரில் தித்தன், பேர்அவதான், ஊபாஆன், மித்ரன், தாயன்ஆதலன், குரவன் முதலான தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பொன் மோதிரங்களும், பொன் ஆபரணங்களும் கிடைத்துள்ளன என்றார் அவர்.

 முன்னதாக, அருங்காட்சியகக் காப்பாட்சியர் ந. செüந்திரபாண்டியன் வரவேற்றார். புலவர் பாரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.