குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து சாவு

திருச்சி, ஜூலை 30: திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்து சனிக்கிழமை உயிரிழந்தார்.  வரகனேரி தெற்குப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி ரேணுகா (30) முத்து
Published on
Updated on
1 min read

திருச்சி, ஜூலை 30: திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்து சனிக்கிழமை உயிரிழந்தார்.

 வரகனேரி தெற்குப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி ரேணுகா (30) முத்துசாமிக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.

 இதனால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறு காரணமாக உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி ரேணுகா தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சனிக்கிழமை இறந்தார்.

 இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.