குளித்தலை, ஜூலை 30: தமிழக முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, குளித்தலையில் திமுகவினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீஸôர் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து, கரூர் மாவட்டம், குளித்தலையில் ஒன்றிய திமுக முன்னாள் செயலர் த. திருநாவுக்கரசு தலைமையிலும், சுங்கவாயில் பகுதியில் குளித்தலை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நகரச் செயலருமான இரா. மாணிக்கம் தலைமையிலும் ஏராளமான திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சிவராமன், குளித்தலை நகர விவசாய அணி துணை அமைப்பாளர் நா. தமிழரசன், துணைச் செயலர் கே.எம். செந்தில்குமார், ராஜேந்திரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜி. செந்தில்வேலன், ஒன்றிய இலக்கிய அணி நிர்வாகி செந்தில்நாதன், குமாரமங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸôர் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.