தமிழமுத மன்றம்: கவிஞர் முகமது பிலாலின் "கவிச்சிறகு' கவிதைநூல் வெளியீட்டு விழா, தலைமை: தலைவர் ச. அறிவுடைநம்பி, வெளியிடுபவர்: ஜா. மாலிக்உசேன், பெசன்ட் அரங்கம், மாலை 6.
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மைத் துறை: வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை வேளாண் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா, தலைமை: வேளாண்மை உற்பத்தி ஆணையர் க. அருள்மொழி, திறந்து வைப்பவர்: மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தொடக்கி வைப்பவர்: மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், ஆட்சியர் கா. பாஸ்கரன் பங்கேற்பு, காவேரி திருமண மண்டபம், முற்பகல் 11.
உலகத் திருக்குறள் பேரவை: புலவர் மொ. பழநிமாணிக்கனார் நினைவு இசைத்தமிழ் அறிஞர்கள் தொடர் வகுப்பு, பொருள்: இசைத் தமிழறிஞர்கள், பேசுபவர்: முனைவர் சண்முக. செல்வகணபதி, வீரராகவ மேல்நிலைப் பள்ளி, மாலை 5.
ஸ்ரீசத்யசாயி சேவா சமீதி: வேதபாராயணம் மாலை 5, பஜனை மாலை 6, மங்கள ஹாரத்தி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீனிவாசபுரம், இரவு 7.
பாரத் நிர்மாண்: மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நிறைவு விழா, தலைமை: சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் கே.எம். ரவீந்திரன், சிறப்பு விருந்தினர்: தஞ்சை நகர்மன்றத் தலைவர் ஜெ. தேன்மொழி, விஜயா திருமண மண்டபம், பிற்பகல் 3.
சக்தி விநாயகர் கோயில்: விஷ்ணு துர்கை அம்மனுக்கு நவசண்டி ஹோமம், விக்னேஸ்வர பூஜை தொடக்கம், யாகப்பா நகர், காலை 8.
சிற்பிகள் தொண்டு மையம் : தஞ்சை கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் சிற்பிகள் மாரத்தான் (தொடர் ஓட்டம்), தொடக்கி வைப்பவர்: தஞ்சை மாவட்ட தடகள கழகத் தலைவர் து. கிருஷ்ணசாமி, அன்னை சத்யா விளையாட்டு அரங்க வளாகம், காலை 7.
திருவையாறு
ஐயாறப்பர் திருக் கோயில்: ஆடிப்பூர மகோத்சவ விழா, பல்லக்கு காலை 8, சுவாமி குதிரை வாகனத்தில் உலா, கோயில் வளாகம், இரவு 8.