தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சை தெற்குவீதி தங்கவேல் செட்டியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) முதல் ஆக. 21 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
சிதம்பரம் வி.ஏ. அபிநயா புத்தக நிறுவனம் சார்பில் தமிழகத்தின் முக்கிய பதிப்பகங்கள் வெளியிட்ட நாவல், கவிதைகள், சிறுகதை, சமையல்கலை, மருத்துவம், சுயமுன்னேற்றம், ஆன்மிகம், இலக்கியம், பொதுக்கட்டுரைகள், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட 5,000 தலைப்புகளில் சுமார் ஒரு லட்சம் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் கல்வி தொடர்பான சி.டி., டி.வி.டி.,க்குளும் உள்ளன.
இந்தக் கண்காட்சியில் ரூ. 1,000 மதிப்புள்ள பகவத் கீதை ரூ. 120-க்கும், 180 மதிப்புள்ள ஓலைச்சுவடி ரூ. 100-க்கும், காந்தியின் சுயசரிதை ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.