தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்து அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் விவசாயிகள் வளர்ச்சி பணிமனை மற்றும் கண்காட்சி தொடங்குகிறது.
இந்தக் கண்காட்சி நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள காவேரி திருமண மண்டபத்தில் ஆக.4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கண்காட்சி கருத்தரங்கை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடக்கி வைக்கிறார்.
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் மற்றும் மாநில வேளாண்மை உயர் அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.