நவீன முறையில் வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி

பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நவீன முறையில் வெள்ளாடு வளர்த்தல் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.  பெரம்பல
Published on
Updated on
1 min read

பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நவீன முறையில் வெள்ளாடு வளர்த்தல் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

 பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆடு வளர்ப்போர், ஆடு வளர்ப்புத் தொழிலில் ஆர்வமுள்ள சிறு, குறு விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், இளைஞர்களுக்காக நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். இரா. மாரிமுத்து தலைமை வகித்தார்.

 பயிற்சியில் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் கால்நடை மருத்துவர். சிவகுமார், ஆடு வளர்ப்பில் உள்ள அனுகூலங்கள், வளர்ப்புக்கேற்ற வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல், கொட்டகை அமைப்பு, கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு, உயர்மட்டத் தரை முறையில் ஆடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, பசுந்தீவன உற்பத்தி முறைகள், இனவிருத்தி பராமரிப்பு முறைகள், நோய் மேலாண்மை முறைகள், இளங்குட்டிகள் பராமரிப்பு முறைகள், உள் மற்றும் வெளி ஒட்டுண்ணிகள் தடுப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

 பயிற்சியில் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் மணிகண்டன், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.