திருச்சி, ஜூலை 30: திருச்சி பூலாங்குளத்துப்பட்டி சிவானி கல்விக் குழும மாரியம்மன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவும், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவும் அண்மையில் நடைபெற்றது.
சிவானி கல்விக் குழுமப் பெருந்தலைவர் பி. செல்வராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் எஸ். பிராபகரன், செயலர் எஸ். விக்னேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
எஸ்.எஸ்.கே. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், சிவானி பொறியியல் கல்லூரி முதல்வர் கணேசன் சாந்தி, மாரியம்மன் கல்வியியல் கல்லூரி முதலவர் (பொறுப்பு) ஆர். சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெற்றோர் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், ராக்கம்பட்டி ஆசிரியர் மாணிக்கம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த, நல்லாசிரியர் விருது பெற்ற எம். பெரியசாமி ஆகியோர் பேசினர்.
முதல்வர் பி. ஜோஸ்பின்மேரி வரவேற்றார். எஸ். முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
ஆர். பிரேமலதா நிகழ்ச்சியைத் தொகுத்தார். ஏற்பாடுகளை ஏ. சத்தியபாமா, ஆர். நர்மதா ஆகியோர் செய்தனர்.