தஞ்சாவூர், ஜூலை 30: மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 83.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9,276 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,500 கன அடி, வெண்ணாற்றில் விநாடிக்கு 7,002 கன அடி, கல்லணைக் கால்வாயில் வினாடிக்கு 2,421 கன அடி, கொள்ளிடத்தில் வினாடிக்கு 814 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.