திருவாரூர், ஜூலை 30: திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் வெடித்து, லாரி தீப்பற்றியதில், ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்தவர் கலையரசன் (40). இவர் சனிக்கிழமை இரவு திருவாரூரிலிருந்து தூத்துக்குடிக்கு லாரியில் அரிசி ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவருடன் லாரி கிளீனர் நாகை மாவட்டம், வலிவலத்தைச சேர்ந்த பாலமுருகன் (22), கலையரசனின் வளர்ப்பு மகளான செந்தாமரைச்செல்வி (12) ஆகியோர் சென்றனர். தியானபுரம் அருகே லாரி சென்றபோது சாலையோரத்தில் இருந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் குழாய் வெடித்து, லாரி தீப் பிடித்ததில் கலையரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார், பாலமுருகன், செந்தாமரைச் செல்வி ஆகியோர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.